குற்றம் புரிந்தவன்

இனிக்கு சனிகிழமை...

வழமையா சனி எண்டால் நான் எழும்ப 12... 1 மணி ஆகும். ஆனால் இப்ப 8 30க்கே வேளில சொப்பிங் போறதுக்கு ஆயத்தமாகி கொண்டு இருக்கன்.

அப்படி என்ன இனிக்கு விசேசம் எண்டு நினைக்கிறிங்களா??

எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன்.. ஒரு மகள். மாததில ஒரு சனி கிழமை நான் அவங்க கூட சொப்பிங் போவன். சொப்பிங் முடிச்சிட்டு... மதியம் எங்காவது ரெஸ்ராரண்ல சாப்பிடுவம். சாப்பிட்டு முடிச்ச பிறகு கூட வீடு திரும்ப மனம் இருக்காது எங்களுக்கு... படம் பார்க்க தியேட்டர் போவம். அல்லது பார்க் பீச் எண்டு எங்காவது போவம். நாங்க வீடு திரும்பும் போது எப்படியும் நல்ல இருட்டி இருக்கும்...

ம்ம்ம்ம்......... அந்த சனி கிழமை இனிக்கு தானுங்க.

வேலை களைப்போட... பண கஸ்டத்தில இருக்கிற எல்லா அப்பாக்களுக்கும் இது கஸ்டம் தானுங்க. ஆனால் எனக்கு அப்படி இல்லை. இந்த சனிக்காகவே நான் காத்திருப்பன்... அப்படி ஒரு விருப்பம் எனக்கு. எனக்கு பண கஸ்டம் இல்லைங்க.. ஆனால் வேலை களைப்பு ரொம்பவே இருக்கு... அதனால வழமை மாதிரி இல்லாமல் வேளைக்கு எழும்புறது மட்டும் ரொம்ப கஸ்டம் பாருங்க....

இப்ப கூட பாருங்க... நான் ரொம்பவே லேட்... எண்ட மகன் ரெடி ஆகிட்டு கோல் பண்ணிட்டான். அதுக்கு பிறகு தான் அவசரமா எழும்பி ரெடி ஆகிட்டு இருக்கன்.

அவசரமா ரெடி ஆகிட்டு... கார்ல ஏறி உக்காந்து... காரை எடுத்தன்... டீ கூட குடிக்கல... என் எண்டால் எண்ட மகன் கொஞ்சம் கோபகாரன். நேற்றே சொன்னவன் வழமை மாதிரி லேட் ஆக கூடாது எண்டு. நானும் ப்ரொமிஸ் பண்ணினான். ஆனால் அதை காப்பாத்த முடியல. சாலை முடக்கில இருந்த பெட்டோல் செட்ல டீ குடிப்பாமா எண்டு நினைக்கும் போது...

மகன் 2 ஆவது தடவையா கோல் பண்ணினான். 'அப்பா... இன்னும் வரல.. என்னப்பா??'

ம்ம்ம்.... டீ குடிக்கிற பிளானை விட்டிட்டு... கார் ஐ விரைவு படுத்தினன்.

இப்ப உங்களுக்கு ஒரு குழப்பமா இருக்கும் என்ன... அந்த கேள்விக்கு விடை தான் இப்ப சொல்ல போறன். எண்ட பிள்ளைகள் என்கூட இல்லை. அவங்க அம்மா கூட இருக்காங்க. மாததில ஒரு நாளைக்கு அவங்க கூட பழகிறதுக்கு எனக்கு அனுமதி இருக்கு. உங்களுக்கே ரொம்ப கஸ்டமா இல்ல... என்ன பிள்ளைங்க கூட பழகிறதுக்கு எனக்கே கட்டுப்பாடு... ஒரு பக்கம் கஸ்டமா இருந்தாலும்... மற்ற பக்கம் எண்ட கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை தான் எண்ட இந்த நிலைக்கு காரணம்.

என்னில ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. நானா எதையும் தேடி போனது கிடையாது... ஆனால் எதாவது தானா வந்தால்.. அதை விலகி போக எனக்கு தெரியாது. இது தானுங்க எண்ட கெட்ட பழக்கம்.

குடும்ப வாழ்க்கை ல பெண்களுக்கு ஆண்கள் மேல பிடிக்காத 2 விசயம் இருக்குங்க. ஒண்டு மது பழக்கம். இது எனக்கு ரொம்பவே இருந்திச்சுது. அதை கட்டுபடுத்த எண்ட மனைவி பல முறை முயற்சி செய்தும் முடியல. ஆனால்... எண்ட இந்த பழக்கத்துக்காக அவள் என்னிக்குமே உண்மையாக கோபிச்சதும் கிடையாது எண்டு தான் நான் சொல்லுவன். ஏன் எண்டால் நாம காதலிக்கும் போதே எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது அவளுக்கு நல்லாவே தேரியும். எங்க காதலுக்கு அவங்க அம்மா அப்பா எதிர்ப்பு தெரிவிச்சதுக்கும் எண்ட இந்த குடிப்பழக்கம் தான் காரணம். அவங்க அப்பா அம்மாவையும் எதிர்த்து அவ என்கூட வந்த்தப்போ நான் அவளுக்கு ப்ரொமிஸ் பண்ணினன். என்னன்னு??? இந்த குடிப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமா விட்டுறன் எண்டு.

ஆனால் ப்ரொமிஸ் பண்ணினா அதை காப்பாத்துற பழக்கம் எனக்கு இல்லைங்க... அதனால எண்ட குடிப்பழக்கத்தை என்னால விட முடியல.

அப்ப எதுக்காக உங்ககுள்ள இந்த பிரிவு?? அப்படி எண்டு நீங்க நினைக்கிறிங்க அப்படித்தானே... என்னோட வேலை இடத்தில ஒரு பொண்ணோட தானாகவே எனக்கு ஒரு பழக்கம் கிடைச்சுது. அந்த பழக்கத்தில இருந்து நான் விலகி போக முடியல. இது தாங்க.... நம்ம பிரிவுக்கு காரணம்.

இப்ப என் மேல உங்களுக்கு கோபமா இருக்கும் என்ன??

சரிங்க.. பிழை விடுறது மனித இயல்பு தானே.. இந்த விசயம் எண்ட மனுசிக்கு தெரிஞ்சப்பவே நமக்குள்ள சண்டை ஆரம்பிச்சுது. அப்ப எங்களுக்கு ஒரு பிள்ளை தான். 2 ஆவது மகள் மனுசிட வைத்தில இருந்தாள். சண்டை ஆரம்பிச்சப்பவே... நான் என்னை திருத்திக்க தொடங்கினன். பொண்ணோட ஏற்பட்ட பழக்கத்தை முழுவதுமாகவே நிறுத்தினன். என்னை மன்னிச்சு... என்கூட பழையமாதிரி வாழும்படி என் மனைவிகிட்ட வெகுவாக கெஞ்சினன். ஆனால் எண்ட குடிப்பழக்கத்தை சகித்து கொண்ட அளவுக்கு... என்னோட இந்த நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியல எண்டு நினைக்கிறன். அந்த போண்ணோட இருந்த பழக்கத்தை மட்டும் அல்ல... எண்ட குடிப்பழக்கத்தையும் நான் சரியாக குறைச்சு அவள் என்னை ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்துகிட்டன்.

ஆனால் நடந்தது எல்லாம் நல்லாவே நடக்கல. என்னோட உண்மையானா முயற்சிக்கு பலன் கிடைக்கல. மாறாக அவளுக்கு என்மேல சந்தேகம் தான் கூடிச்சுது. அதன் விளைவு.... எண்ட மகள் பிறக்கிற நேரத்தில அவள் 2 பிள்ளைகள் கூடவும் தனிகுடித்தனம் போற மாதிரி முடிஞ்சுது.

நான் என்னங்க செய்ய முடியும்?? அப்பல இருந்து இப்ப வரைக்கும் நான் செய்த பிழைக்கு ரொம்ப அதிகமாகவே தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கன்.

அவள் வைத்தில பிள்ளையோட தனிக்குடித்தனம் போனபோது... நான் எவளவோ தடுத்துப்பார்த்தன். ஆனால் அதுக்கு பலன் கிடைக்கல. அவளும் ஒரு நேர்ஸாக இருந்த படியால்.. பிரசவம் பற்றி கவலைப்படத்தேவை இல்லை எண்டு மனசுக்குள்ள நினைச்சிகிட்டன். அதுக்கு பிறகு நடந்த பல நிகழ்வுகள் நாம சேருறதுக்கு சாதகமா அமையல... பதிலுக்கு... ஊடலும்... புரிதுணர்வு இல்லாததால ஏற்பட்ட கோபமும். நமக்குள்ள சண்டையும்.. பிரிவையும் தான் கூட்டிச்சுது. என்னோட பிழையால தானே இது எல்லாம் எண்டு நீங்க நினைக்கிறிங்க. அது சரி. ஆனால்... அந்த டைம்ல... நான் ஒரு முழுமையான கட்டுப்பாடான ஆளா என்னை மாத்திக்கிட்டன். தேவை இல்லாத தொடர்புகள்... குடிப் பழக்கம் எல்லாத்தையும் அறவே விட்டிருந்த்தன். ஆனால் உடைஞ்சு போன கண்ணாடியை ஒட்ட முடியாது எண்டு அவள் தான் என்கூட திரும்பவும் சேரல.

பிழை செய்தது நான் தானே.. அதனால.. நானே என்னை மாத்திகிட்டு.. அவள் கிட்ட கேட்டன்.. இதை விட உனக்கு என்ன வேணும் எண்டு... ' உன்கிட்ட இருந்து டைவோர்ட்சும்.. என் பிள்ளைகளும் எனக்கு வேணும்' எண்டு அதே கோபத்தோட கேட்டா. அதிலையும் அவளே ஜெயிச்சா... நான் தோத்திட்டன். அவள்கூட மட்டும் இல்லீங்க. என் வாழ்க்கையிலும் தான்.

பிளாஸ்பாக்கை விட்டு விட்டு கதைக்கு வாரன்...

கார் நிண்ட விதத்திலயே நான் எவளவு வேகமா வந்திருக்கன் எண்டு அவளுக்கு புரிஞ்சிருக்கவேணும். வழமையா 'எப்படி இருக்கீங்க?' எண்டு கேட்கிறவள். அதை கட் பண்ணீட்டு... ஒரு விதமான பார்வையுடன் பிள்ளைகளை கார்ல ஏத்திவிட்டாள். நான் எப்ப அவளை பார்த்தாலும்.. அவை லவ் பண்ணும் போது எப்படி பார்த்தனோ... அப்படி தானுங்க பார்க்கிறனான்.

'செய்யுறது எல்லாம் செய்திட்டு என்ன லவ் பார்வை' அப்படி நீங்க நினைக்கலாம். ஆனால் பாருங்க... பிழையை உணர்ந்திட்டு நான் எப்ப மாறினனோ.. அன்னில இருந்து இனிக்கு வரை நான் எந்த ஒரு போண்ணோடையும் தொடர்பு வைச்சுக்கல. இதை அவளே நம்பல.. நீங்க நம்ப போறிங்களா என்ன?? ஆனால் அது தான் உண்மை.

பிள்ளைங்க ஏறினதும் காரை எடுத்திட்டே.. பிள்ளைங்க கூட கதைச்சிட்டே காரை ஓட்டினன்.

சோக கதையை விட்டிட்டு.. என்னுடைய சந்தோசமான கதையையும் கொஞ்சம் கேழுங்க. எனக்கு பிள்ளைங்க எண்டால் ரொம்ப விருப்பம். மகனுக்கு இப்ப 13 வயதாகுதுங்க... அவன் ரொம்ப கேட்டிகாரன். எண்ட பிள்ளையாச்சே அப்படித்தானே இருப்பான். ஒரு நாளைக்கு 10 தரம் எனக்கு போன் பண்ணுவான். அதுக்கு அவனுக்கு யாருமே தடை இல்லை. அன்னிக்கு அவன் செய்த வேற்றிகரமான விசயம் என்ன எண்டாலும் எனக்கு சொல்லுவான். நான் அவண்ட அம்மாக்கு செய்த பிழையை அவனுக்கு செய்ய விருப்பம் இல்லை. என்னதான் நான் பிஸியா இருந்தாலும் அவனுக்கு தான் முதல் உரிமை குடுத்து.. அவன் சொல்லுறதை கேட்பன். இன்னும் அவனுக்கு ஊக்கம் குடுப்பன். ஆனால் எல்லா பிள்ளைகளை மாதிரியே அவனுக்கு அட்வைஸ் சொன்னா பிடிக்காது. அதுவும் நான் சொன்னா கேட்கவே மாட்டான். நான் அட்வைஸ் சொன்னால்... அதை கேட்க விருப்பமில்லாத அவன் பதில் என் பிழைகளை சுட்டிக்காட்டுறத மாதிரியும்... அட்வைஸ் சொல்ல அம்மாக்கு மட்டும் தான் உரிமை இருக்கு என்கிறது மாதிரியும் இருக்கும். பறவாய் இல்லீங்க... அவன் எண்ட அட்வைசை கேட்கா விட்டாலும்... தன்னுடைய நாளாந்த விடயங்களை என்கூட பகிர்ந்து கொள்ளுறதே ரொம்ப சந்தோசமா நான் எடுத்துக்கிறன்.

மகளுக்கு வயது 9. அதிகமா நம்ம பிரச்சினையை புரிஞ்சுக்கிற மனசு அவளுக்கு இல்லாவிட்டாலும்.. அவள் அண்ணனை மாதிரி இல்லாம. அவள் அம்மா மாதிரி இல்லாம... அவள் நடந்துக்கிறது எனக்கு ரொம்பவே மனசுக்கு ஆறுதலா இருக்கும்.

தொடரும்....

கொஞ்சம் உணர்வு பூர்வமா முடிப்பம் எண்டு நினைச்சன். எனோ... முடியல. நீங்களே முடித்து வையுங்கள்... நன்றி

3 reacties:

Jagadeesh said...

nalla kathai !

Saravanavadivel said...

Its Gud One. Check Cricket World Cup 2011 Fixtures

Saravanavadivel said...

Nice Kathai, Keep on Post…

http://www.whizzcamera.com