ஊடல்...


உன்னைத் தேடி தேடி
உள்ளத்தை தானே
உடைத்துக் கொண்டேன் - இன்று
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
உனக்குள்ளே
உன்னோடு
உனக்கே தெரியாமல் நான் !!!

...களங்கமில்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்களாகாது கானல்...
வார்த்தை பொய்யாகும்
வாழ்க்கை பொய்யாகும்
என் காதல் பொய்யாவதேது??

பாடலை கேட்க

நான் மலரோடு..

மலர் இது உனக்காக
மலர் உன் முகம் எனக்காக
பலர் இருப்பார் உனக்காக
எவர் இருக்கார் எனக்காக ?
உயிர் துடிப்பது இன்றும் உனக்காக - என்
துயர் துடைப்பாய் என்றும் எனக்காக...

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

ஏம்மா?

ஜாடை காட்டி ஆசைமூட்டி சல்லாப பாட்டுப்பாடி
நீங்கள் மட்டும் எங்க நெஞ்சை தாக்கலாமா??
உள்ள நிலை தெரிந்தும் இந்தக்கேள்வி கேட்கலாமா??
ஏம்மா ? ? எம்மா ? ? ஏம்மா ? ?

பாடல் இங்கே

நீ யாரோ??


கண்களில் தோன்றி
உள்ளத்தில் நிறைந்து
இதயத்தை காயம் செய்த்து
கன்னத்தில் வழிந்து
கனவாகி காணாமல் போனாயே ! ! !

நீ யாரோ ? ?
கண் தோன்றி கண்காணா
கண்ணீரோ ? ?

கள்ளவிழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக்குழிகளில் உயிர் மூடிவைத்தாயே
இன்று யாரோபோல் தள்ளி நின்றாயே
நட்பு உறவில்லை என்றாயே
நீ யாரோ ? ?
கண் தோன்றி கண்காணா
கண்ணீரோ ? ?

படம் - ஆயுத எழுத்து
பாடல் இங்கே