இன்பமே....

இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ..
என் இதயக்கனி... நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..

சக்கரை பந்தல் நான்... தேன்மழை சிந்தவா...
சந்தன மேனியும் இங்கே... சாகச நாட்கம் எங்கே??
தேனொடு பால் தரும் செவ்விழனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்...
தேவதை போலெழில் மேவிட நீவர... காண என் மனம் ஏங்கும்....

இன்பமே உந்தன் பெயர் பெண்மையோ..
என் இதயக்கனி... நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி...
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி..

Movie - Ithaya kani / இதயக்கனி

என் எண்ணங்கள்...

என் எண்ணங்கள் நீ இல்லையா...
உன் எண்ணத்தில் நான் இல்லையா ? ?
என் பாடல் உனதில்லையா... - அது
உன் காதில் விழவில்லையா ? ?
அன்னை மனம் கொண்ட பெண்ணே
உன்னை தினம் காண மனம் ஏங்கும்...
என்னை ஒரு பிள்ளையென எண்ணிவிடு
எந்தன் மனம் தூங்கும்...
நீயாக பாசத்தை தந்தாயே...
காணாமால் ஏனோ நீ சென்றாயே...

படம் - காதல் கவிதை / Kathal Kavithai
Composer: Illaiyarajah
பாடல் இங்கே

சுமைதாங்கி ஏன் இன்று...

முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா??
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா??

சிறு மணல்வீடு செய்து விளையாடும் போது
புயலோடு மழை வந்தது...

வாழ்க்கை கலைந்தோடும் முகில் ஆனது...
வா..ழ்..கை கலைந்தோடும் முகில் ஆ... ன...து !!!!

பாடல் - Sumaithangi en inru...

கூந்தலில் பூ சூடினேன்...

.
கூந்தலில் பூ சூடினேன்...
கூடலையே நாடினேன்...
கூடிவிட மனது துடிக்குது....
கூட வந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் அந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது...

படம் - ஊமை விழிகள் Oomai Vizhigal
இசை - Manoj Gyan